Search This Blog

Wednesday, July 1, 2015

பிரிவின் வலி

நொடிக்கொரு முறை இறந்து
நொடிக்கொரு முறை பிறந்து
இது தான்  என் வழக்கை

என்று உன்னை சேர்வேன்
என்று உன்னில் கலப்பேன்
ஒரு கோடி சிந்தனைகள்
உன்னோட  விவாதிக்க  ஆசை
ஒரு கோடி உணர்வுகள்
உன்னோடு பங்குவைக்க ஆசை

ஆனால் நீயோ நிசப்தமாய்
எப்போதும் ஒரே போல் உன்
உலகத்தில் உன் ஆசைகளோடு
உன் போக்கிலே நடக்கிறாய்
பழக குழந்தையாய் இருக்கிறாய்
ஆனால் உள்ளே பாறையாய்
உன் வழக்கை விதிகள் வேறு
என் வழக்கை விதிகள் வேறு

நீ  என்னோடு உனது   ஆசைகள் 
உணர்வுகள்  சிந்தனைகள்  எல்லாம் 
பகிர்வாய்  என்ற தீரா ஆசையுடன்
பல முறை உயிர்த்து எழுகிறேன் 
வாழ்கை மிக மிக குறுகியது
ஆயுளின் நொடி பொழுதுகள்
குறைந்து கொண்டே போகிறது

என் ஆன்மாவோடு
கலந்து விட வருவாயா?
காத்து இருப்பேன் .........!!
விழிகலில் நீரோடு ......!!



Sunday, May 31, 2015

கண்ணம்மாவுக்கு பிடித்தது - உண்மை பேசுதல்


கண்ணம்மா........

உனக்கு பிடித்த  உண்மை பேசுதல் பற்றி எழுதுகிறேன்
பொய் என்ற வார்த்தை கூட உனக்கு பிடிக்காது
அதனால் அவ்வாக்கை  முடிந்தவரை
இந்த பதிவிலிருந்து களைந்து  விட்டேன்

நீ அசிக்கடி என்னிடம் உண்மையே பேசவேண்டும்
என்று அன்பு கட்டளை இடுவாய் அது ஏனென்றும்
குழந்தைக்கு சொல்வது போல் சொல்லிதருவாய்
உண்மை பேசாதவர்கள்  நம்பதகுந்தவர்கள் அல்ல
உண்மைக்கு புறம்பாக பேசுபவர்களோடும்
பேசு என்று வற்புறுத்துவோர்களுடனும்
உறவாடுதல் நல்லதல்ல என்றும் சொல்லுவாய்
கண்கள் நோக்கி உண்மை பேச முடியதவன்
கோழை என்றும் உண்மை பேசுவது ஒருவனுக்கு
மேலும் அழகை சேர்க்கும் என்றும்
நாம் உண்மையாக நேசிபவர்களிடம்
உண்மையை தவிர வேறேதும் பேசக்கூடது
அப்படியே பேசினால் அது அவரை
ஏமாற்றுவதாகும் என்றும் சொல்லுவாய்

நம்மை நம்பி நம்மோடு இருப்பவர்களை
ஏமாற்றுவது பஞ்ச மஹா பவம் என்பாய்
பொய்யர்களை கண்டால் பொங்கி எழுவாய்
ஒவ்வொரு முறையும்  உண்மை சொல்லும்
போதும் உன் முகம் பூவாக மலரும்
பொய் சொல்லும் போது வாடி வருந்தும்

மற்றவர்களை நம்ப வைத்து நாம் என்ன சாதித்தோம்
நம் வழக்கை தானே  முடங்கி போகும்
நீ சொன்னது இன்னும் என் காதுகளில்
ரீங்கரமிட்டு கொண்டிருக்கிறது
கண்ணம்மா ........

அச்சமில்லை அச்சமில்லை  அச்சம் என்பதில்லையே
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் 
அச்சமில்லை அச்சமில்லை  அச்சம் என்பதில்லையே
துச்சமாக எண்ணி நம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை  அச்சம் என்பதில்லையே

வழக்கை வாழ்வதற்கே !
எனதுயிரே கண்ணம்மா .......



Monday, May 18, 2015

கண்ணம்மாவுக்கு பிடித்தது - அழுகை.....


கண்ணம்மா குழந்தயானாளா அல்லது 
குழந்தையானதால்  கண்ணம்மா ஆனாளா 
அவள்  வெள்ளை மனம் கொண்ட வெகுளி.. 
அவளை அறியாமலே அவள் கண்களின் 
ஓரம் எப்பொழுதும் நீர் கசிந்து கொண்டிருக்கும்....
சந்தோஷம்னாலும் துக்கமானாலும்.
யாருக்கும் தீங்கு மனதாலும் நினையாள் 



நீ  எனக்கு கிடைத்த வரப்ரசாதம் 
என அடிக்கடி உரக்க சொல்லுவாள் 
எத்தனை தடவை என் கண்களை பார்த்தாலும்  
அவள் கண் இரத்தமாக கலங்கும்... அதில் 
என்னை இழந்து விடக்கூடாதே என்கிற 
ஏக்கமும் பயமும்  ஸ்பஷ்டமாக தெரியும் 
இழக்கவும் மாட்டேன் என்கிற வீம்பும் தெரியும் 



என்னை சிறு குழந்தை எனச்சொல்லுவாள் 
அன்றும் இன்றும் என்றும் என்னை 
குழந்தாயாகவே பாவிக்கிறாள் 
நான் அவளது குழந்தை அவள் எனது....
அவள் கண்ணீர் காணும் போது 
எனது நெஞ்சம் உருகும் .....
நான் உயிர் வாழ்வதே உனக்க்காக 
தானடி  என் கண்மணியே கண்ணம்மா !







Saturday, May 16, 2015

கண்ணம்மாவுக்கு பிடித்தது - தூக்கம்....

என் கண்ணம்மாவுக்கு
தூங்க பிடிக்கும்
தூங்குவதற்கு நேரம் காலம்
இல்லை அவளுக்கு
கவலையாக இருந்தால் தூங்குவாள்
தூங்கி எழும் போது கவலை தீரும்..
இது அவள் நம்பிக்கை
மூக்கு புடைக்க உண்டால் தூங்குவாள்
தூக்கம் தானாக வருமே
மழை பெய்தால் போர்த்திக்கொண்டு
சுகமாக தூங்கிபோவாள்
வேலை இருந்தால் கூட
தள்ளி போட்டுவிடுவாள்..
புத்தகத்தை கையில் எடுத்தாலே
தூக்கம் கட்டாயம் வரும்
நான் அருகில் இருந்தால்
என் நெஞ்சில் சாய்ந்து விட்டால்
ஆனந்த சயனம் அவளுக்கு
முத்தங்கள் கொடுத்தாலே
கண்மலர் திறந்து சிரித்து எழுவாள்......
என் குழந்தை என் கண்ணம்மா....


 


Saturday, May 9, 2015

கண்ணம்மாவுக்கு பிடித்தது - மழையில் அழகு

கண்ணம்மா ஒரு குழந்தை!!!!!!!அவள் ஒரு மாயை ...
உங்களுக்கு அவளை தெரியாதல்லவா
அவளுக்கு என்னென்ன பிடிக்கும் என்று
சொல்லபோகிறேன்.  ஒன்றொன்றாக

மழை

கண்ணம்மாவுக்கு மழை ரொம்ப பிடிக்கும்
மழை சாரலை பார்த்தாலே குதூகலிப்பாள்
மனதுக்குள் சந்தோசம் நிறைந்துவிடும்
தனிமையில் நேரம் போவது தெரியாமல்
மழையை ரசித்துக்கொண்டிருப்பாள்......
சட்டென்று பின்னல் சென்று கட்டிக்கொண்டால்
அப்படியே நெஞ்சில் சாய்ந்து  விடுவாள்.....
 யாரும் இல்லா இரவு நேரம் என்றால்
மழையல் இறங்கி நனைவாள்
அந்த இயற்கையோடு இணைந்ததாய்
அவளுக்கு ஒரு மன நிறைவு...
மெதுவாக அவள் தலையை துவட்டி ...
அவள் கண்களில் வழியும் நீர்  துடைத்து..
தாலாட்டி  தூங்க வைப்பேன் என் மடியில்.
என் கண்மணி என் கண்ணம்மா !!!!!!!
நான் பாரதி அல்ல
அவளும் பாரதி கண்ணம்மா அல்ல
அவள் என் கண்ணம்மா !!!!